வாழைக்காய் கோஃப்தாகறி

வாழைக்காய் கோஃப்தா கறி: சுவையான சமையல் குறிப்புகள்
வாழைக்காய் கோஃப்தாகறி
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

(கோஃப்தா தயாரிக்க)

வாழைக்காய்-4

கொத்தமல்லி- 1 கட்டு

சீரகம், சர்க்கரை- தலா 1 தேக்கரண்டி

பூண்டு- 4 பல்கள்

இஞ்சி- 1 துண்டு

பச்சை மிளகாய்-5

எலுமிச்சம் பழம்- பாதியளவு

பெரிய வெங்காயம்- 2

கடலை மாவு- 25 கிராம்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

கறி தயாரிக்க:

உருளைக்கிழங்கு- 300 கிராம்

பெரிய வெங்காயம்- 2

புளித்த தயிர்- 100 கிராம்

பிரிஞ்சி இலை=-2

சீரகம்- அரை தேக்கரண்டி

கரம் மசாலா பௌடர், மஞ்சள் தூள்- தலா 1 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய்- 5

இஞ்சி- 1 சிறிய துண்டு

பூண்டு- 4 பல்கள்

மிளகாய்த் தூள்- 50 கிராம்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் கோஃப்தா தயாரிக்க வேண்டும். வாழைக்காயை வேகவைத்து தோலை உரிக்க வேண்டும். கொத்தமல்லி, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது, கடலை மாவு, உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை வேக வைத்த வாழைக்காயுடன் சேர்த்து கட்டியில்லாமல் மசிக்கவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் போதுமான அளவு எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ந்தவுடன் இந்த உருண்டைகளை உருட்டிப்போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். கோஃப்தா ரெடி.

அடுத்து கறி செய்ய வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சீரகம், பிரிஞ்சி இலைகளை இட்டு பொரிக்கவும். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் கரம் மாசாலா பௌடர், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். உருளைக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, அடுப்பில் இருக்கும் கலவையில் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தயிருடன் ஓரளவு நீர் சேர்த்து அடித்துக் கலக்கி உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்கவும் பச்சை மிளகாயைச் சேர்த்து உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் பொரித்து வைத்திருக்கும் வாழைக்காய் கோஃப்தாக்களை அதில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை மேலே தூவி சுடச்சுட சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com