

தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய்- 300 கிராம்
வெங்காயம்- 250 கிராம்
மிளகாய் வற்றல்- 4
தனியா, உளுத்தம் பருப்பு- தலா 1 மேசைக்கரண்டி
கடுகு, மஞ்சள், பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
புளி- 1 உருண்டை
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட வேண்டும். பெருங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு மிளகாய், தனியா, உளுத்தம் பருப்புகளை வதக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும், கத்தரிக்காயைப் போட்டு தேவையான உப்பு போட்டு, மஞ்சள் பொடி போட்டு அரைப் பக்குவத்தில் வேக வைக்க வேண்டும். தேங்காய்த் துருவல், மிளகாய், தனியா, புளி, உப்பு சேர்த்து அரைத்து உளுத்தம் பருப்பைச் சேர்த்து ஒன்றிரண்டாய் அரைத்து கத்தரிக்காயில் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். வாணலியில் தேவையான எண்ணெய் வைத்து கடுகைத் தாளித்து வெங்காயத்தைப் போட்டு சற்று வதக்கவும். பின்னர், கத்தரிக்காயுடன் சேர்த்து சுருளாக்கி கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து உபயோகிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.