வீட்டுக் குறிப்புகள்....
ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களைக் குறைக்க உதவுகிறது. பன்னீர் கொண்டு நீங்கள் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்னைக்கு ஓர் சிறந்த தீர்வைக் காணலாம்.


ரோஜாவின் மகிமை:
ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களைக் குறைக்க உதவுகிறது. பன்னீர் கொண்டு நீங்கள் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்னைக்கு ஓர் சிறந்த தீர்வைக் காணலாம்.
ரோஜா இதழ்களை கூழாக அரைத்து, அத்துடன் பாலாடையைச் சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடுகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளிக்க உடல் புதுப்பொலிவு பெறும்.
பயத்தம் பருப்பு மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவினால் முகம் பொலிவு பெரும்.
வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லியத் துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடல் நறுமணம் உண்டாகும்.
ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். சோப்புக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.
சமையல் செய்ய டிப்ஸ்:
அடை செய்யும்போது, காரத்துக்கு மிளகாய் சேர்ப்பதற்குப் பதிலாக இஞ்சி, மிளகு சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும். பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது, பயத்தம் பருப்பை வாசனை வரும்படி நன்கு வறுத்துவிட்டுச் செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.
வாழைத்தண்டு கூட்டு செய்யும்போது, அதனுடன் ஒரு பிடி முருங்கைக்கீரையை சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும்.
ஃப்ரூட் சாலட் செய்யும் போது, சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொண்டால், அதிக சுவையுடன் இரும்புச்சத்தும் அதிகரிக்கும்.
குலோப் ஜாமூன் உட்புறம் வேகாமல் இருந்தால், ஜீராவுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு, குக்கர் உள்ளே வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கினால் சுவையான மற்றும் மிருதுவான குலோப் ஜாமூன் தயார்.
பாதுஷா செய்யும் போது, மாவில் கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிகவும் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...