தேவையான பொருள்கள்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பாசுமதி அரிசி - 3 கிண்ணம் (வேகவைத்தது)
இஞ்சி - 1துண்டு
பூண்டு - 6 பற்கள்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 ( நறுக்கியது)
பீன்ஸ் -2 கிண்ணம் (நறுக்கியது )
காளான் - 1 கிண்ணம் (நறுக்கியது)
சர்க்கரை - 1 தேக்கரண்டி ,
உப்பு- தேவையான அளவு
சோயா சாஸ் , எலுமிச்சை சாறு -தலா 2 தேக்கரண்டி,
கருப்பு மிளகு சக்தி - 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் (நறுக்கியது )- 4 தேக்கரண்டி
செய்முறை:
பாசுமதி அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு ú சர்க்கவும். தண்ணீர் கொதி வந்ததும் வடிகட்டிய அரிசியில் சேர்க்கவும். சுமார் 10 நிமிடங்கள் வரை வேகவைத்து சாதம் தயார் செய்யவேண்டும். இப்போது ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின்னர், காளான்களைச் சேர்த்து, பழுப்பு நிறமாகும் வரை நன்கு கிளறவும். தொடர்ந்து பீன்ஸ் ,உப்பு, சர்க்கரை சேர்க்கவும். இதை செய்து முடித்தவுடன் வேகவைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும். உதிரி பதம் வந்ததும் சோயா சாஸ், வினிகர், மிளகுத் தூள் சிறிய வெங்காயத் துண்டுகளையும் கலந்து குறைந்த தீயில் கிளறி இறக்கவும். சுவையான காளான் - பீன்ஸ் ரைஸ் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

