எள் முறுக்கு

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மசாலாக்களை ஒன்றாகச் சேர்த்து சலித்துகொள்ள வேண்டும்.
எள் முறுக்கு
எள் முறுக்கு
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

கடலை மாவு, அரிசி மாவு- தலா 200 கிராம்

எள்- 50 கிராம்

மிளகாய்ப் பொடி- 1 மேசைக்கரண்டி

பெருங்காயம், கரம் மசாலா- தலா 1 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மசாலாக்களை ஒன்றாகச் சேர்த்து சலித்துகொள்ள வேண்டும். வாணலியை சூடுபடுத்திக் கொண்டு எள்ளைப் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.

தேவையான வெந்நீரில் பெருங்காயத்தைக் கரைத்துகொள்ள வேண்டும். மாவுக் கலவையில் தேவையான தண்ணீர், பெருங்காயத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வெந்து காய்ந்ததும் முறுக்குக் குழலில் எண்ணெயைத் தடவி சிறு, சிறு உருண்டைகளாக மாவுக் கலவையைப் போட்டு எண்ணெயில் பிழிய வேண்டும்.

பொன்னிறமாக வந்ததும் பொரித்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com