விண்வெளிப் பயணத்துக்குத் தயாராகும் இளம்பெண்...

ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவைச் சேர்ந்த இருபத்து மூன்று வயதான ஜானவி தங் கேட்டி, விண்வெளிப் பயணத்துக்குத் தயாராகிவருகிறார்.
விண்வெளிப் பயணத்துக்குத் தயாராகும் இளம்பெண்...
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவைச் சேர்ந்த இருபத்து மூன்று வயதான ஜானவி தங் கேட்டி, விண்வெளிப் பயணத்துக்குத் தயாராகிவருகிறார். டைட்டன்ஸ் விண்வெளி வீராங்கனை பயிற்சித் திட்டத்தின்படி, விண்வெளிப் பயணம் செய்ய உள்ள 'முதல் இந்தியப் பெண்' என்ற பெருமையைப் பெறவுள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான டைட்டன் விண்வெளி பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் 2029 மார்ச் மாதத்தில் 5 மணி நேரம் வரை விண்வெளியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தேர்வாகியிருக்கிறார்.

பள்ளிக் கல்வியை தனது சொந்த ஊரில் முடித்த ஜானவி தங் கேட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்வி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பூஜ்ஜிய ஈர்ப்பு விசை, அதிக உயரப் பயணங்கள், விண்வெளித் தொகுப்பு செயல்பாடுகளில் பயிற்சி பெற்றுள்ளார்.

2022-இல் போலந்தின் சிராகோவில் உள்ள அனலாக் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இணையவெளி நாட்டு விண்வெளி வீரர், முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர்.

இவரது அறிவுத் தேடல் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரை ஐஸ்லாந்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு சந்திரன், செவ்வாய் கோள்களைப் பிரதிபலிக்கும் அமைப்புகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர். நாசா, இஸ்ரோவின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com