தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி, பச்சரிசி -
தலா அரை கிலோ
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
பச்சை மிளகாய்- 8
பீன்ஸ்- 100 கிராம்
கடலைப் பருப்பு- 50 கிராம்
கேரட்- 200 கிராம்
உளுத்தம் பருப்பு- 100 கிராம்
செய்முறை:
புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, பச்சரிசி ஆகிய மூன்றையும் சுத்தம் செய்து, நன்றாக ஊறவைத்து, அரைக்கவும். அந்த மாவில் உப்பு சேர்த்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும். பின்னர், கேரட் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், பீன்ஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடலைப் பருப்பை நன்றாக வறுத்து, அத்துடன் கேரட், பீன்ஸ், மிளகாயை சேர்த்து சிறிது வதக்கி மாவில் கொட்டவும். பின்னர், அடுப்பில் குழிப்பணியார அச்சை வைத்து, குழிகளில் எண்ணெய் தடவி பணியாரங்களாக வார்த்து, இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.