வீட்டு மருத்துவம்....

சுக்கை நன்கு தூள் செய்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
வீட்டு மருத்துவம்....
Published on
Updated on
1 min read

சுக்கை நன்கு தூள் செய்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சிறிது சுக்கை ஒரு வெற்றிலைக்குள் வைத்து மடித்து, நன்கு மென்று தின்றால் வாயுத் தொல்லை உடனே நீங்கும்.

சுக்குடன் சிறிய துளசி இலையை மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் பிரச்னைகள் தீரும்.

வெண்ணெயுடன் காய்கறிகளையும், முள்ளங்கியை தேனுடனும் கலந்து சாப்பிடக் கூடாது. தயிர் சாதமும், மோர் சாதமும் சாப்பிட்டுவிட்டு வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. ஆரஞ்சு, சாத்துக்குடி, கிவி போன்ற புளிப்பு சுவையுள்ள பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. -சௌமியா சுப்பிரமணியன்.

விதை நீக்கிய தக்காளி சூப் சிறுநீரக் கோளாறுக்கு நல்லது.

நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதையை கஷாயமாக்கிக் குடிக்க, கெட்டநீர் கழியும்.

அடிக்கடி பப்பாளிக் காயை சேர்த்துகொள்ள உடலில் தேவையில்லாத, கெட்டநீர் வெளியேறும்.

மாதுளம் பழம் குடற்புழுக்களை அழிக்கும்.

பனை நுங்கு வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

துரியன் பழம் மலட்டுத் தன்மையைப் போக்கும்.

குங்குமப்பூ கண்நோய்களைப் போக்கும்.

நார்த்தாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டும்.

தினமும் ரோஜாப்பூ இதழ்கள் சாப்பிட உடல் சுறுசுறுப்பு அடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com