ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கிய பாரம்பரிய தொக்கு, சிற்றுண்டி, ஊறுகாய் வியாபாரம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழிலாக மாறியதோடு, 15 பெண்களுக்கு வாழ்வாதாரம் தரும் விருட்சமாக மாறியதை எண்ணி மகிழ்கிறார் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த எழுபத்து நான்கு வயதான கிரிஜா.
தனது வெற்றியின் ரகசியம் குறித்து அவர் கூறியது:
'எனது பூர்விகம் கேரளத்தில் உள்ள பாலக்காடு. சென்னையில் வளர்ந்தேன். எனது குடும்பம் கூட்டுக் குடும்பம். 18 வயதில் திருமணமானது.
புகுந்த வீடும் கூட்டுக் குடும்பம்தான். அப்பளம்கூட பொரிக்கத் தெரியாத நான், புகுந்த வீட்டின் சமையல் வேலைகளை ருசியாக சமைக்கும் அளவுக்கு முன்னேறியது மாமியாரின் வழிகாட்டுதல்தான்.
நாளடைவில் பலவிதமான தொக்குகள், ஊறுகாய்கள், பொடிவகைகள், பலகாரங்கள், இனிப்பு வகைகளைச் செய்து அக்கம்பக்கத்தவர்களுக்கு வழங்கி சுவையையும், தரத்தையும் கேட்டு அறிந்தேன். எனது கைப்பக்குவம் மேம்பட்டது. கொஞ்சம் வருமானமும் கிடைக்க ஆரம்பித்தது.
2019-இல் திருமணப் பலகாரங்கள் செய்ய ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்தது. பலகாரங்களைச் செய்து கொடுத்து அசத்தினோம்.
கரோனா காலம் தொடங்கியது. சாதாரண குடும்பங்களில் கடை, ஹோட்டல் வேலைக்குச் சென்று வந்த ஆண்களுக்கு வேலை இல்லாமல் போனது. பல பெண்கள் என்னிடம் வேலை கேட்டுவந்தனர். வேலை கேட்டு வந்த மூன்று பேரைச் சேர்த்துக் கொண்டு பலகாரங்கள், பொடிகள் செய்வதை அதிகரித்தேன்.
பின்னர், வீட்டுக்குப் பக்கத்திலேயே வாடகைக்கு வீடு பிடித்து உணவுப் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். 'கிரிஜா பாட்டி ஹோம் ஃபுட்ஸ்' என்ற பெயரில், தனியார் நிறுவனமாக 2021-இல் பதிவு செய்தேன். தற்போது 15 பெண்கள் பணிபுரிகின்றனர்.
'புளி மிளகாய், ஊறுகாய், தொக்கு, பொட்டுக் கடலை பொடியில் தயாரிக்கும் வெண்ணெய் மாலட்டு, பாதுஷா, காரத் தட்டை, மிக்சர், பூண்டு கருவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடி, மாங்காய் தொக்கு' போன்ற 50 வகையான தரமான இனிப்பு கார வகைகளைத் தயாரித்து, இணைய வழியில் ஆர்டர்களை பெற்று விற்பனை செய்கிறோம்.
பச்சை மிளகாய், புளி சேர்த்து செய்யப்படும் தொக்கு மிகவும் அதிகமாக விற்பனையாகிறது. பலகாரங்கள், சிற்றுண்டி தொக்கு வகைகள் செய்முறைகளையும் பதிவு செய்கிறேன்' என்கிறார் கிரிஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணியின்போது கீழே விழுந்து லேத் உரிமையாளா் உயிரிழப்பு
வெந்தயக்கீரை சப்பாத்தி
உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்...
சில்லி சீஸ் பரோட்டா
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

