அரசியல் கட்சிகளின் மாநாட்டில் எடுத்த மிகச் சிறந்த முன்னெடுப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக சைகை வழி மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்தார் எஸ்.மகாலட்சுமி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கட்சியின் அணிவகுப்பு, பொதுக்கூட்டத்துக்காக 5 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களில் ஐநூறு பேர் செவி, பேச்சுத்திறன் இல்லாதவர்கள். இவர்களுக்காக மாநாட்டு மேடைக்கு அருகே தனியிடம் அமைக்கப்பட்டிருந்தது.
இவர்கள் தலைவர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதற்காக, சைகை வழி மொழிபெயர்ப்பாளர் எஸ்.மகாலட்சுமி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் உடனுக்குடன் சைகை மொழியில் பேச, மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாகப் புரிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.