

தேவையான பொருள்கள்:
சாமை அரிசி - 1/4 கிலோ
தண்ணீர் - 6 கிண்ணம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெல்லம் - 1/4 கிலோ
முந்திரி - 8
திராட்சை - 8
நெய் - தேவைக்கேற்ப
பால் - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
சாமை அரிசி, பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும். வாணலியில் நெய்விட்டு, முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். 6 கிண்ணம் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வறுத்த பாசிப்பருப்பை முதலில் போட்டு அரை பதம் வெந்ததும், சாமை அரிசியைப் போட்டு குழைய வேகவிடவும். பிறகு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல், நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான சத்தான சாமை சர்க்கரைப் பொங்கல் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.