சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது, முதலில் சிறிது கடலை மாவை எண்ணெய்யில் வறுத்துவிட்டு கிழங்கைப் போட்டால், ரோஸ்ட் மொறுமொறுவென்று இருக்கும்.
நூடுல்ஸ் மிகுந்து விட்டால், அதனுடன் கடலைமாவும், அரிசி மாவும் சம அளவு சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் கொஞ்சம் கலந்து, பக்கோடா பதத்துக்குப் பிசைந்து, எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். சுவை மிகுந்த நூடுல்ஸ் பக்கோடா தயார்.
வெயில்காலத்தில் மோர் விரைவில் புளிக்காமல் இருக்க, வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக்கி மோரில் போட்டு வைத்து, மோரை உபயோகிக்கும்போது எடுத்து விட வேண்டும்.
முருங்கைக்கீரை, அகத்திக் கீரையை வதக்கும் போது, கரண்டியின் காம்புப்பகுதியை வைத்துக் கிளறவும். அப்படிக் கிளறினால் கட்டி விழாமல் கீரை உதிரி உதிரியாக இருக்கும்.
மோர்க்குழம்பு செய்யும்போது பொங்கிப் பொங்கி வழிந்தால், கவலை வேண்டாம். ஒரு உருளைக் கிழங்கை எடுத்து தோல் சீவி, துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்தத் துண்டுகளைப் போட்டால் மோர்க் குழம்பு பொங்குவது நின்றுவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமயல்... சமயல்... எளிதில் தயாராகும் ஆரோக்கிய உணவுகள்
இன்றைய ராசி பலன் (03.06.2026) - மிதுனம்
நுங்கு சர்பத்
வீட்டுக் குறிப்புகள்...
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


