பருப்புகளை லேசாகச் சூடுபடுத்தி எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது. நீண்ட நாள்கள் கெடாமலும் இருக்கும்.
பருப்பு டப்பாக்களில் வெள்ளைப் பூண்டு, சுக்குத் துண்டு போட்டு வைத்தால் பூச்சி, புழுகள் நெருங்காது.
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழைகளை வாழைப் பட்டையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.
இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்துவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
சமையல் எண்ணெய்யில் ஒரு துண்டு வெல்லம் போட்டால் எண்ணெய் பொங்காது.
இட்லிப் பொடி அரைக்கும்போது சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
நீராகாரத்தில் வெங்காயம் அல்லது கேரட் ஒன்றை நறுக்கிப் போட்டு நார்த்தங்காய் வற்றலுடன் 2 டம்ளர் பருகினால் உடல் குளிர்ச்சியாகும்.
வடை மாவில், வடை தட்டும் போது உள்ளே ஒருபனீர் துண்டை வைத்து மூடி பொரித்தால் வடை சுவை கூடும். -நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.
கோதுமை மாவுடன் சிறிது சாதம் வடித்த கஞ்சியைச் சேர்த்துப் பிசைந்து போட்டால், பூரி மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
முற்றின தேங்காயைப் பல்லு பல்லாக நறுக்கி, நெய்யில் சிவக்க வறுத்துப் பாயசத்தில் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு போண்டா செய்வதுபோல் அனைத்துக் காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி, உருட்டி கடலைமாவில் தோய்த்து பொரித்து எடுத்தால் சுவை மிகுந்த வெஜிடபிள் போண்டா தயார்.
புடலங்காயின் விதைகளை எடுத்து வதக்கி, உளுந்தம் பருப்பு, மிளகாய் சேர்த்து வறுத்து புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்தால் சுவையாக இருக்கும்.
பனீரை சிறு துண்டுகளாக்கி, தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும் சிவக்கும்படி வறுத்து எடுத்து பட்டாணி குருமாவில் சேர்த்தால் அதிக சுவை கிடைக்கும்.
மோர்க்குழம்பு செய்ய தேவையான அளவு புளித்த மோர் இல்லையென்றால், புளிப்பான மூன்று தக்காளிகளை, மோர்க்குழம்புக்குத் தேவையான பொருள்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்புச் சுவை வந்துவிடும். -ஆர். கீதா, கொச்சி.
தொடர்புடையது
விதம் விதமா ரசம் செய்யலாம்...

சாதம் குழைந்துவிட்டால்... சமையல் டிப்ஸ்!
சமையல் டிப்ஸ்...

சருமம் பொலிவு பெற... பெண்களுக்கு சில டிப்ஸ்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

