இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பழைய பாடல்: காடு

கார்த்திகைத் தீபமெனக்   காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடி - கிளியே   பார்வை குளிருமடி! காடு பொருள் கொடுக்கும்   காய்கனி ஈன்றெடுக்கும் கூடிக் களித்திடவே - கிளியே   குளிர்ந்த நிழல் கொடுக்கும

Updated On :20 செப்டம்பர் 2012, 9:47 pm IST

கார்த்திகைத் தீபமெனக்

  காடெல்லாம் பூத்திருக்கும்

பார்த்திட வேண்டுமடி - கிளியே

  பார்வை குளிருமடி!

காடு பொருள் கொடுக்கும்

  காய்கனி ஈன்றெடுக்கும்

கூடிக் களித்திடவே - கிளியே

  குளிர்ந்த நிழல் கொடுக்கும்!

குரங்கு குடியிருக்கும்

  கொம்பில் கனி பறிக்கும்

மரங்கள் வெயில் மறைக்கும் - கிளியே

 வழியில் தடையிருக்கும்!

மாவும் பழுத்திருக்கும்

  மலர்கள் விழித்திருக்கும்

பூவின் மது சுரக்கும் - கிளியே

  போவார் அடி வழுக்கும்!

பச்சை மயில் நடிக்கும்

  பன்றி கிழங்கெடுக்கும்

நச்சரவங் கலங்கும் - கிளியே

  நரியெல்லாம் ஊளையிடும்!

கல்லுரல் போன்ற முகம்

  காட்டிடும் பன்றிகளை

மெல்லிய மான் தடுக்கும் - கிளியே

  வேங்கைகள் வால் நிமிர்க்கும்!

சிங்கம் புலி கரடி

  சிறுத்தை விலங்கினங்கள்

எங்கும் திரியுமடி - கிளியே

  இயற்கை விடுதியிலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.