தையரசி வருகவே...
தையரசி! தமிழரசி! வருகவே! - தலை தாழ்த்தியுனை வணங்குகிறோம் வருகவே! வையமெலாம் வளங்கொழிக்க வருகவே! -எமை வாழ்த்தியருள் வரங்கொடுக்க வருகவே! மையழகு விழிமலர்த்தி வருகவே! - பசு மஞ்சள்முகப் பொலிவெடுத்து வருகவே!


தையரசி! தமிழரசி! வருகவே! - தலை
தாழ்த்தியுனை வணங்குகிறோம் வருகவே!
வையமெலாம் வளங்கொழிக்க வருகவே! -எமை
வாழ்த்தியருள் வரங்கொடுக்க வருகவே!
மையழகு விழிமலர்த்தி வருகவே! - பசு
மஞ்சள்முகப் பொலிவெடுத்து வருகவே!
கையசைவில் கரும்பசைத்து வருகவே! -செழுங்
கதலிவாழைக் காலெடுத்து வருகவே!
மொய்குழலில் முகில்மிதக்க வருகவே! -பனி
முத்துநகை இதழுதிர்க்க வருகவே!
பொய்யிருளின் திரைகிழிக்க வருகவே! -ஒளிப்
பொதுவுடமைக் கதிருதிக்க வருகவே!
நெய்யுருகிக் கமகமக்க வருகவே! - சுவை
நிறையமுதம் பொங்கலிட்டோம் வருகவே!
மெய்யுருகிப் படையலிட்டோம் வருகவே! -மனம்
மிகயிரங்கிப் படியளக்க வருகவே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...