தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலை விதி!

சாலையின் குறுக்கே ஓடாதே சற்றும் அவசரம் காட்டாதே மேலே கீழே பார்க்காதே மீறி வீதியைக் கடக்காதே! பட்டம் விடுதல் விளையாட்டு - நடை பாதையில் விட்டால் வினையாகும் சட்டம் விதிகளைப் பின்பற்று - இதை சாரா தோரை நீவ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:12 pm

ரமண ராஜசேகர்

சாலையின் குறுக்கே ஓடாதே

சற்றும் அவசரம் காட்டாதே

மேலே கீழே பார்க்காதே

மீறி வீதியைக் கடக்காதே!

பட்டம் விடுதல் விளையாட்டு - நடை

பாதையில் விட்டால் வினையாகும்

சட்டம் விதிகளைப் பின்பற்று - இதை

சாரா தோரை நீவிரட்டு!

வாகனம் ஓட்டிச் செல்கையிலே - நீ

வலது, இடது பார்த்துச்செல்

காவலர் தருகின்ற குறியதனை - தினம்

கவனத்துடனே கேட்டுக்கொள்!

நிற்றல் என்பது சிவப்பு நிறம் - இதை

நன்றாய் உணர்ந்தால் நன்மை வரும்

கற்க; பச்சை புறப்படுதல் - இதை

கருத்தாய் அறிவீர் திறம்படவே!

தகவல் பலகை பார்த்துக் கொள் - தினம்

தவறா(த) வழியில் நீயும் செல்

பகலோ இரவோ எதுவென்றாலும்

பாதை விதியை மதித்து நில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.