சிறுத்தைக்குக் கல்யாணம்
காட்டிலே சிறுத்தைக்குக் கல்யாணம்! கரடியின் வீட்டிலே ஊர்கோலம்! வீட்டுக்கு வீடு உற்சாகம்! விருந்துக்கு மேசையில் அலங்காரம்! சிங்க ராஜா தலைமையிலே- சிறுத்தை மாலை மாற்றியதாம்! தங்க நிறத்துப் புலிவந்


காட்டிலே சிறுத்தைக்குக் கல்யாணம்!
கரடியின் வீட்டிலே ஊர்கோலம்!
வீட்டுக்கு வீடு உற்சாகம்!
விருந்துக்கு மேசையில் அலங்காரம்!
சிங்க ராஜா தலைமையிலே-
சிறுத்தை மாலை மாற்றியதாம்!
தங்க நிறத்துப் புலிவந்து-
தாலி எடுத்துக் கொடுத்ததுவாம்!
யானைகள் மத்தளம் முழங்கிற்று!
குரங்குகள் மங்களம் வழங்கிற்று!
பூனைகள் ஒத்து ஊதிற்று!
குருவிகள் இசையைப் பாடிற்று!
சாப்பாடெல்லாம் தடபுடலாம்!
சம்பந்தி வீட்டார் செலவுகளாம்!
மாப்பிள்ளை சிறுத்தை சாப்பிட்டதும்-
மகிழ்வாய் அனைவரும் அமர்ந்தனராம்!
கையில் வெற்றிலை தட்டெடுத்து
கிளியும் எலியும் தந்ததுவாம்!
மொய்யை வாங்கி மூட்டையிலே-
முயலும் குதிரையும் கட்டியதாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...