தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குரங்கு

 வண்ணச் சட்டை போட்டிருக்குது வித்தைக்காரக் குரங்கு வாலை அசைத்து நடக்க

News image
Updated On :27 டிசம்பர் 2013, 9:42 am

பாவண்ணன்

 வண்ணச் சட்டை போட்டிருக்குது
 வித்தைக்காரக் குரங்கு
 வாலை அசைத்து நடக்கிறது
 வித்தைக்காரக் குரங்கு
 
 குட்டிக்கரணம் போட்டுவிட்டு
 கண்ணை உருட்டிப் பார்க்கிறது
 ஒட்டிப்போன வயிற்றுப் பக்கம்
 விரல்நகத்தால் சொறிகிறது
 
 உயர்ந்து நிற்கும் கம்பத்திலே
 ஒட்டிக்கொண்டு ஏறுகிறது
 உச்சிமீது அமர்ந்துகொண்டு
 உற்று உற்றுப் பார்க்கிறது
 
 உரித்துக் கொடுத்த வாழைப்பழத்தை
 ஒய்யாரமாய்த் தின்கிறது
 சப்பை மூக்கை உறிஞ்சிக்கொண்டு
 கையை உயர்த்தி அசைக்கிறது
 
 கூடி நின்ற கூட்டமெல்லாம்
 கைதட்டி சிரிக்கிறது
 கம்பத்திலிருந்த வித்தைக்குரங்கு
 தரையை நோக்கிக் குதிக்கிறது
 
 தட்டு சுமந்து நடக்கிறது
 வித்தைக்காரக் குரங்கு
 சில்லறை கேட்டு நிற்கிறது
 வித்தைக்காரக் குரங்கு.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.