மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பொங்கலோ பொங்கல்...

 பொங்கலோ பொங்கலென்று பாடுவோம் புத்தாடை அணிந்தேதான் கூடுவோம்

News image
Updated On :11 ஜனவரி 2013, 5:37 am

இராம. வேதநாயகம்

 பொங்கலோ பொங்கலென்று பாடுவோம்
 புத்தாடை அணிந்தேதான் கூடுவோம்
 எங்குமே மகிழ்ச்சியினைத் தேக்குவோம்
 ஏற்றமாய் இந்நாளை ஆக்குவோம்!
 
 கரும்பாக இனித்தேதான் வாழுவோம்
 கருத்தோடு நண்பருடன் சூழுவோம்
 எறும்பாக உழைத்தேமுன் னேறுவோம்
 எங்கும்தமிழ் என்பவரைச் சேருவோம்!
 
 மஞ்சளிலே மகிமையைக் காணுவோம்
 மறவாமல் கூட்டுறவை நாடுவோம்
 கொஞ்சுகின்ற தமிழாலே பேசுவோம்
 கொடுக்கின்ற கரம்கொண்டு வாழ்த்துவோம்!
 
 அன்னையினை தந்தையினை போற்றுவோம்
 அறிவளிக்கும் ஆசானை ஏற்றுவோம்
 பண்பான வாழ்க்கையாக மாற்றுவோம்
 பண்பில்லா பேர்களையும் மாற்றுவோம்!
 
 இன்பத்தைப் பொங்கலிலே பொங்குவோம்
 ஈடில்லா மகிழ்வோடே தங்குவோம்
 அன்பினையே பொங்கலிலே பொங்குவோம்
 அழகான கல்வியிலே தங்குவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.