/

எங்கள் ரமண தாத்தா

 வான்புகழும் திருச்சுழியில் பிறந்த ரமணதாத்தா வசியமலை அருணைதனில் அமர்ந்த ரமணதாத்தா

News image
Updated On :9 மார்ச் 2013, 4:18 am

ரமண ராஜசேகர்

 வான்புகழும் திருச்சுழியில் பிறந்த ரமணதாத்தா
 வசியமலை அருணைதனில் அமர்ந்த ரமணதாத்தா
 'நான்'என்ற அகந்தையழிய தவங்கள் செய்ததாத்தா
 ஞானியாகி காட்சிதந்த கருணை தெய்வதாத்தா
 
 சின்னப்பையன் உருவில்வந்து யோகியான தாத்தா
 சிவமைந்தன் முருகனாக காட்சிதந்த தாத்தா
 கண்கள்மூலம் நயனதீட்சை அருளும் ரமணதாத்தா
 காணும்மாந்தர் நெஞ்சினிலே வளரும் ரமணதாத்தா
 
 அருணாசல ஒலியீர்ப்பால் அருணை சென்றதாத்தா
 ஆதிசிவன் அனுப்பிவைத்த உருவே ரமணதாத்தா
 குருவுருவாய் மலைதனிலே வாழ்ந்த ரமணதாத்தா
 குவலயத்தோர் துன்பம்தீர வழிகள் தந்ததாத்தா
 
 பறவைகளும் விலங்குகளும் விரும்பும் ரமணதாத்தா
 பார்வைதனில் அருளமுதம் வழங்கும் ரமணதாத்தா
 உறவுகொண்டு அணிலும்மயிலும் பழகும் ரமணதாத்தா
 உண்மைஅன்பின் இலக்கணமே அழகுரமணதாத்தா
 
 நான்யார்?என தன்னையறியும் வழிகள் சொன்னதாத்தா
 நானிலமே போற்றுகின்ற மகான் ரமணதாத்தா
 மேன்மைமிகு ஞானியாகி வாழ்ந்த ரமணதாத்தா
 மெய்யுணர்வில் ஆத்மஞானம் உணரவைத்த தாத்தா!
 

 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.