கொண்டப்பள்ளி பொம்மைகள்
கொண்டப்பள்ளி என்பது ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். இதன் மொத்த மக்கள் தொகையே


கொண்டப்பள்ளி என்பது ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். இதன் மொத்த மக்கள் தொகையே 38,000தான். விஜயவாடாவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இந்தக் கிராமம் உள்ளது.
இங்குதான் உலகப் புகழ்பெற்ற கொண்டப்பள்ளி பொம்மைகள் தயாராகின்றன. அங்கு இந்தப் பொம்மைகளுக்குப் பெயர் "கொண்டப்பள்ளி பொம்மலு'.
இவை, அங்கு கிடைக்கும் ஒருவித மென்மையான மரத்தின் கட்டைகளிலிருந்து செய்யப்படுகின்றன. இவற்றுக்கு காய்கறிகளின் மூலம் தயாரிக்கப்படும் வண்ணங்கள் மற்றும் எனாமல் வர்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் பொம்மைகளைத் தயாரிப்பவர்கள் 16-ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து நிரந்தரமாகக் குடியேறிய கலைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன.
நானூறு ஆண்டுகளாகப் பரம்பரை பரம்பரையாக இத்தொழில் தொடர்ந்து வருகின்றது.
இந்தப் பொம்மைகள் பெரும்பாலும் குழந்தைகளால் பயன்படுத்தப்படுவதால் எளிதில் உடைந்து போகாத வகைத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றில் மிகவும் புகழ்பெற்றவை தசாவதாரம் (கிருஷ்ணரின் பத்து அவதாரங்களைக் குறிப்பவை) வகை பொம்மைகள்.
யானையில் சவாரி வரும் பாகன், பல்லக்கு மற்றும் அதைத் தூக்கிவருபவர்கள், மணமக்கள் மற்றும் விலங்குகள், பறவைகள், கிராமியக் கலைஞர்கள் போன்றவற்றை இந்தப் பொம்மைகள் சித்திரிக்கின்றன. இது தவிர காகிதக்கூழைப் பயன்படுத்தியும் இந்தப் பொம்மைகள் இக்காலத்தில் செய்யப்படுகின்றன.
இந்தப் பொம்மைகள் நமது நாட்டிலுள்ள சிறுவர்கள், மற்றும் கலைப்பொருள்கள் சேகரிப்பவர்கள், வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோரால் மிகவும் விரும்பி வாங்கப்படுகின்றன.
ஆனாலும் இந்தக் கலைஞர்கள் மிகவும் ஏழ்மைநிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
ஏனென்றால் தற்போது இவற்றைச் செய்வதற்கான பொருட்களின் விலையேற்றம் இவர்களை மிகவும் பாதித்துள்ளது.
ஆனாலும் சில குடும்பங்கள் இத்தொழிலை விடாமல் செய்து வருவதால் இந்தக் கலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...