1. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.
-ஹெலன் கெல்லர்.
2. நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா?
-அன்னை தெரசா.
3. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
-அம்பேத்கர்.
4. வீரன் ஒரு முறைதான் சாகிறான். கோழை ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டேயிருக்கிறான்.
-ஷேக்ஸ்பியர்.
5. கல்வியின் வேரானது கசக்கும். ஆனால் அதன் விளைச்சல் இனிக்கும்.
-அரிஸ்டாட்டில்.
6. சோம்பல் மாவீரனையும் வீழ்த்திவிடும்.
- பார்ட்டன்.
7. பழிவாங்குதல் வீரமன்று. ஆனால் பொறுப்பதே வீரம்.
- ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
8. ஊக்கத்தைக் கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
-அண்ணா.
9. கோபத்தைக் கொன்று விடு. இல்லையேல் அது உன்னைக் கொன்றுவிடும்.
-குருநானக்.
10. உயர்ந்த எண்ணங்களை உடையார் ஒரு நாளும் துன்பம் அடையார்.
- காந்தியடிகள்.
தொகுப்பு :
ரா.ராம்பிரசன்னா, அரக்கோணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கள்ளா் சீரமைப்புப் பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

போலி கையொப்பம் விவகாரம்: காவல் துறை சிஐடி முன்பு மம்தா மருமகன் ஆஜா்






