டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கதைப்பாடல்: நட்பு!

நடக்கும் தவற்றை நயமுடன் தடுத்து இடித்து உரைத்து இதமுடன் திருத்தும்!

News image
Updated On :17 அக்டோபர் 2015, 10:24 am

தளவை இளங்குமரன்

நடக்கும் தவற்றை

நயமுடன் தடுத்து

இடித்து உரைத்து

இதமுடன் திருத்தும்!

தடுக்கி விழுந்தால்

தாவி விரைந்து

துடித்துப் பிடித்து

தூக்கி நிறுத்தும்!

தடத்தை அடைக்கும்

தடைக்கல் உடைத்துப்

படிக்கல் படைக்கும்!

பலத்தைக் கொடுக்கும்!

முடக்கும் விரக்தி

முழுவதும் விலக்கி

முடிக்கும் முயற்சி

முனைப்பினை வளர்க்கும்!

உடுக்கை இழந்தால்

உதவிடும் கரம்போல்

இடுக்கண் களைந்து

இனிதுளம் களிக்கும்!

உடற்குள் இருக்கும்

உயிரினை இறப்பும்

ஒடுக்கும் வரைக்கும்

உறுதுணை இருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.