1. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி, தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி. யார் இவன்?
2. உருவம் இல்லாதவன், சொன்னதைத் திரும்பச் சொல்லுவான். யார் இவன்?
3. எங்க அம்மா பிள்ளைத்தாச்சி, எங்கப்பன் சுவர் ஏறிக் குதிப்பான். என்ன இது?
4. பச்சைக் கீரை சமைக்க உதவாது. வழுக்க உதவும். இது என்ன?
5. சிவப்பானவன் எரிவான்.. கறுப்பானவன் தெரிவான். இது என்ன?
6. கால் நான்கு நடக்காது... கண் ஆயிரம் இமைக்காது.. என்ன இது?
7. ஆடி ஆடி நடப்பான், அமைதியாக அதிர வைப்பான்... யார் இவன்?
8. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது... இது என்ன?
9. பூ கொட்ட கொட்ட, ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை... இது என்ன?
விடைகள்:
1. தேங்காய்
2. எதிரொலி
3. பூசணிக்காய், பூசணிக்கொடி
4. பாசி
5. நெருப்பு, புகை
6. நார்க் கட்டில்
7. யானை
8. செருப்பு
9. மழை
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

சப்-ஜூனியா் ஆடவா் தேசிய ஹாக்கி: கோவா, உத்தரகாண்ட், அருணாச்சல் வெற்றி

அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கும் நட்சத்திர பேச்சாளா்கள்

தண்டவாளப்பணிகள் நிறைவு: எழும்பூரிலிருந்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


