கதைப் பாடல்: குரங்கு!
குன்று, காடு, ஊர்ப்புறங்களில் குரங்குக் கூட்டம் வாழும்!கோயில்களில், தோப்புகளில் கும்பலாகச் சூழும்!


குன்று, காடு, ஊர்ப்புறங்களில் குரங்குக் கூட்டம் வாழும்!
கோயில்களில், தோப்புகளில் கும்பலாகச் சூழும்!
ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு ஒடி மரத்தில் ஏறும்!
ஓட்டுதற்கு எவர் சென்றாலும் "உர்...உர்' என்று சீறும்!
குட்டியினை மார்பிலணைத்துக் கொண்டே எங்கும் திரியும்!
கொம்பு விட்டுக் கொம்பு தாவி குதித்தே விந்தை புரியும்!
பட்டுத் தலை மயிர் விலக்கிப் பார்த்துப் பேனைப் பொறுக்கும்!
பரபரப்பாய் உடலைச் சொறிந்த படிதிரிந்தே இருக்கும்!
கொம்பிலேறி நின்று குதித்துக் குதித்து அதனை உலுக்கும்!
கொடுஞ்சினத்தால் கத்திக் கடித்துக் குதறும் சண்டை வலுக்கும்!
கம்பெடுக்கும் குரங்காட்டிக் கட்டளைக்குப் பணியும்!
காண்பவர்கள் கண்களெல்லாம் வியப்பினாலே விரியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...