திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நுனிப்புல்!

ஒரு ஊரில் ஒரு குதிரைக் குட்டி! அந்தக் குதிரைக்குட்டியோடு ஒரு குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது! அவைகளுக்கு அருகில் ஒரு கன்றுக்குட்டி!

News image
Updated On :30 ஜூன் 2018, 6:29 am

ஒரு ஊரில் ஒரு குதிரைக் குட்டி! அந்தக் குதிரைக்குட்டியோடு ஒரு குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது! அவைகளுக்கு அருகில் ஒரு கன்றுக்குட்டி! அது வாலை ஆட்டிக்கொண்டு அதோட தாய்ப்பசு வோடு மேய்ந்து கொண்டிருந்தது! அப்போ கன்றுக்குட்டிக்கு ஒரு சந்தேகம் வந்தது! 
""ம்ம்ம்மா!''
""என்ன?''
""எல்லோரும்...."குதிரை நுனிப்புல் மேயும்!'ங்கிறாங்களே!....அது ஏன்மா?''
""அதுவா?.....ஆமாண்டா கன்னுக்குட்டி!...நாமெல்லாம் புல்லை வேரோட பிடுங்கி முழுசாச் சாப்பிடுவோம்!....ஆனா குதிரைங்க அப்பிடியில்லே!....பாதி பாதியா பல்லாலே நறுக்கிச் சாப்பிடும்!....அதனாலை முழுசா எதையும் செய்யலேன்னா குதிரைகளை உதாரணமாச் சொல்லுவாங்க! மனுசங்க எதாவது பழமொழிகளைச் சொல்லிக்கிட்டிருப்
பாங்க!.....நமக்கு அந்த கெட்டபேர் இல்லே!''
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குதிரைக் குட்டிக்குக் கோபம் வந்தது! அதுவும் தன் 
அம்மாவைக் கூப்பிட்டது!
""அம்மா!....அந்த மாடும் கன்னுக்குட்டியும் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டீங்களா?.....அந்த மாடு நம்மை மட்டம் தட்டிப் பேசினதைக் 
கேட்டீங்களா!....'' 
""வாடி என் அழகுக் குட்டி!....அவங்க ஒண்ணும் புரியாமப் பேசறாங்க....விஷயம் தெரியாதவங்க!....அவங்க வேரோட பிடுங்கி சாப்பிடறதுனாலே புல் மறுபடியும் முளைக்குமா?....''
""முளைக்காது!''
""ஆனா நாம அப்படியில்லே....., லேசா நுனியைக்
கடித்து சாப்பிடறோம்!.... மறுபடியும் புல் 
முளைச்சுடும்!
....மத்தவங்களுக்கும் சாப்பிட மிச்சம் வைக்கிறோம்!....அவங்க நம்ம நல்ல எண்ணத்தை அறியாதவங்க!....நம்ம திறனும் தெரியாது!.....இன்னிக்கு வரைக்கும் வேகத்திற்கு "குதிரைத் திறன்' னு நம்மை ஒப்பிட்டுத்தானே சொல்றாங்க....குதிரையா இருக்கறதுக்கு நாம கொடுத்து வெச்சிருக்கணும்....இன்னும் எவ்வளவோ பெருமைகள் இருக்கு! அதெல்லாம் நான் அப்புறமாச் சொல்றேன்!'' என்றது குதிரை!
""புரிஞ்சுக்கிட்டேம்மா....மாடு என்ன செய்யும்? மனுசங்கதானே இந்தப் பழமொழியெல்லாம் சொல்றாங்க!...'' என்று கூறிவிட்டு தன் சிநேகிதனான கன்றுக்குட்டியுடன் துள்ளிக்கொண்டு விளையாடப் போனது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.