டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பனைமரம்

ஊரின் உள்ளும் வெளிப்புறத்தும்உயர்ந்த மலையின் அடிப்புறத்தும்ஏரி, குளங்கள் வயற்புறத்தும்

News image
Updated On :11 மே 2019, 6:56 am

தளவை இளங்குமரன்


ஊரின் உள்ளும் வெளிப்புறத்தும்
உயர்ந்த மலையின் அடிப்புறத்தும்
ஏரி, குளங்கள் வயற்புறத்தும்
எழிலார் சோலை வனப்புறத்தும்

ஆறு, அருவி அணைப்புறத்தும்
ஆழக் கடலின் கரைப்புறத்தும்
சேறு, செம்மண், உவர்ப்புறத்தும்
செழித்து வளர்வது பனையாகும்!

ஊறும் பதநீர், கருப்பட்டி
உறுசுவை நுங்கு, கற்கண்டு
ஏறும் பசியைத் தணிப்பதற்கு
இனிக்கும் பழங்கள் தருவதுடன்

தேறும் கிழங்கும் கொட்டையினைத்
திருகி இரண்டாய் அரிவாளால்
கீறும் பொழுதும் ஒரு பண்டம்
கிடைக்கச் செய்வது பனையாகும்!

கூரை வேய மரம் ஓலை
கூடை, பெட்டி, விசிறி, முறம் 
தேரை இழுக்க வடக்கயிறு 
தெருவைப் பெருக்கித் துடைப்பமுடன் 

நாரில் கட்டில், பாய், தடுக்கு, 
நடை மிதி, தொப்பி, கிலுகிலுப்பை 
வாரி வாரிப் பல காலம் 
வழங்கி வருவது பனையாகும்!

ஏரும் உழவர் பிடிக்காமல் 
எவரும் விதையும் விதைக்காமல்
நீரும் உரமும் செலுத்தாமல்
நிலத்தில் சுயமாய்ச் செழித்தோங்கி

வேரில் இருந்து குருத்துவரை
விதவிதப் பயனாய் விளங்குவதன்
பேரில் கற்பகத் தருவென்னும்
பெருமை பெறுவது பனையாகும்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.