தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விடுகதைகள்

பாலாற்றின் நடுவே கருப்பு மீன் நெளியுது...

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 12:30 am

தினமணி


1. பாலாற்றின் நடுவே கருப்பு மீன் நெளியுது...
2.அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதி நாள் குறைவாள். பாதி நாள் வளர்வாள்...
3. அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது...
4.  பிறக்கும்போது வால் உண்டு. இறக்கும்போது வால் இல்லை...
5. படுத்துத் தூங்கினால் கண் முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும்...
6. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை, காய் உண்டு விதையில்லை, கன்று உண்டு பசு இல்லை...
7. அதட்டுவான், அலறுவான், ஆனால், கோட்டையை விட்டு வரமாட்டான்...
8. விரல் இல்லாமலே ஒரு கை...
9. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான்...


விடைகள்


1. கண்கள்  
2.  நிலா  
3. தண்ணீர் 
4.  தவளை  
5.  கனவு  
6.  வாழை
7.  நாக்கு  
8.  உலக்கை
9.  நாற்காலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.