அங்கிள் ஆன்டெனா
அண்டார்டிகா பகுதிகளில் எப்போதும் பனிப் பாறைகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை எப்படி இவ்வளவு உயரமாகவும் பரந்து விரிந்தும் உண்டாகின்றன?


கேள்வி: அண்டார்டிகா பகுதிகளில் எப்போதும் பனிப் பாறைகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை எப்படி இவ்வளவு உயரமாகவும் பரந்து விரிந்தும் உண்டாகின்றன?
பதில்: அண்டார்டிகா பகுதியில் பனிப் பாறைகள் மிகுந்து காணப்படுவதற்கு முதல் காரணம், அங்கு நிலவும் கடுங் குளிர். இந்தக் குளிர் எப்படி ஏற்படுகிறது என்பது பற்றி இன்னொரு முறை தெரிந்து கொள்வோம்.
இந்தப் பனிப் பாறைகள் அளவில் மிகப் பெரியவை. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள், சிங்கப்பூர் நாட்டின் மொத்த பரப்பளவுக்குச் சமமான ஒரு பனிப்பாறையைக் கண்டார்கள் என்பது வியக்க வைக்கும் செய்தி. இவ்வளவு பெரிய பனிப்பாறைகள், முதலில் சிறிய அளவில் பனித்துகள் விழுந்து விழுந்து சிறிய பாறையாகின்றன. சிறு துளி பெருவெள்ளம் என்பது போல.
இப்படி உண்டாகும் சிறிய பனிப் பாறைகள் அங்குள்ள நீரோட்டத்தில் வழுக்கிக் கொண்டு செல்லும் போது, மேலும் மேலும் பனிப்பாறைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொண்டே வரும். இப்படிச் சேருவதில் பல பாறைகள் சிறிது சிறிதாக ஆங்காங்கே தங்கி விடுகின்றன.
இவை மேலும் மேலும் சேர்ந்து ஒன்றாகக் கலந்து விடுகின்றன. அளவில் எவ்வளவு பெரியவையாக மாறினாலும் இவை ஒற்றுமையாக ஒன்றாகக் கூடி விடுகின்றன. அங்கிருக்கும் கடல் நீரின் அடர்த்தியை விட இந்தப் பனிப் பாறைகளின் அடர்த்தி குறைவாக இருப்பதால் நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பெரிய பனிப் பாறைகளுக்கு வயதும் அதிகம் இருக்கும். பல ஆண்டுகளாக உருவானவை அல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...