விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விதை!

மலைக்கோயிலிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தனர் ராஜேஷும் ரமேஷும். கடவுளுக்குப் படைத்த பழங்கள் இரண்டை கோயில் குருக்கள் அவர்களிடம் தந்தார்.

News image
Updated On :5 டிசம்பர் 2020, 12:33 pm

சுமன்


மலைக்கோயிலிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தனர் ராஜேஷும் ரமேஷும். கடவுளுக்குப் படைத்த பழங்கள் இரண்டை கோயில் குருக்கள் அவர்களிடம் தந்தார். ரமேஷ் ஒரு பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ராஜேஷுக்கு மாம்பழம் பிடிக்கவில்லை. அவனுக்குக் கொடுத்த மாம்பழம்  ஓர் ஓரத்தில் அழுகியிருந்தது! 

""ஒரு ஓரமாகத்தானே அழுகியிருக்கிறது!.... அந்தக் கடைக்காரரிடம் கத்தி வாங்கி அழுகிய அந்த சிறுபாகத்தை நறுக்கி எறிந்து விட்டு  மீதிப் பழத்தை சாப்பிடேன்!'' என்றான் ரமேஷ்.

""வேண்டாம்!'' என்று அதை கைப்பிடிச் சவற்றுக்கு வெளியே எறிந்துவிட்டான் ராஜேஷ். அது கைப்பிடிச் சுவற்றுக்கு அப்பால் அவர்கள் வழக்கமாக அமரும் பாறைக்கு அருகில் விழுந்தது. மலை ஏறும்போது அங்குதான் அவர்கள் சற்று இளைப்பாறுவார்கள்.  

""அடப்பாவமே நான் என் பழத்தை எச்சில் செஞ்சுட்டேனே!''

""பரவாயில்லை.... நீ சாப்பிடு!''

சில நாட்கள் சென்றன.

ஒரு நாள் நல்ல மழை. மழை ஓய்ந்த பிறகு இருவரும் மலைக்கோயிலுக்குச் சென்றனர். அங்கு மலை ஏறும்போது களைப்பினால் அவர்கள் வழக்கமாக அமரும் பாறையில் சற்று அமர்ந்தனர். 

ரமேஷின் காலுக்கு அடியில் ஏதோ குறுகுறு என்றது. அங்கு ஒரு மாஞ்செடி முளைத்திருந்தது!

பல வருடங்களுக்குப்பின் அழுகிய பழக்கொட்டையிலிருந்து வளர்ந்த அந்த மாமரம் பலருக்கு நல்ல காய்களையும், கனிகளையும் கொடுத்துக்கொண்டிருந்தது. 

ராஜேஷுக்கு இறைவன் எதையோ உணர்த்திக்கொண்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.