ஒளிதரப் பிறந்தாரே!

வாட்டும் பனிக்குளிர் வாடையிலேவானவன் பிறந்தார் தொழுவத்தில்வானகத் தூதர் பாலகனாய்
ஒளிதரப் பிறந்தாரே!
Updated on
1 min read

வாட்டும் பனிக்குளிர் வாடையிலே
வானவன் பிறந்தார் தொழுவத்தில்
வானகத் தூதர் பாலகனாய்
வையகம் தன்னில் பிறந்தாரே!

வையகம் தன்னை வாழ்விக்க
வைக்கோல் அரியணை தவழ்ந்தாரே!
வையகம் ஆளும் வேந்தனாக
வளர்ந்திட தேவனும் பிறந்தாரே!

மரியாள் மாதவப் பாலகனாய்
மாட்சிமை ஆவியாய் இறங்கினாரே
அன்பின், பண்பின் மேன்மைகளை
 புகன்றிட  பாலகன்  பிறந்தாரே!

அகிலத்தில் ஒளிதரப் பிறந்தாரே
ஆனந்த மளித்திடப் பிறந்தாரே!
சகத்தினில் அருள்தரப் பிறந்தாரே
தரணியின் காவலன் பிறந்தாரே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com