விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரியா!

நானும், ரகுவும் எண்ணை தேய்த்துக் குளித்திருந்தோம்... ராமு சித்தப்பா ஜானகி சித்தி எல்லோரும் எனக்கும் ரகுவுக்கும் புது ட்ரெஸ்ùஸல்லாம் தந்தாங்க.... போட்டுக்கிட்டோம்.

News image
Updated On :14 நவம்பர் 2020, 12:30 am

சுமன்

நானும், ரகுவும் எண்ணை தேய்த்துக் குளித்திருந்தோம்... ராமு சித்தப்பா ஜானகி சித்தி எல்லோரும் எனக்கும் ரகுவுக்கும் புது ட்ரெஸ்ùஸல்லாம் தந்தாங்க.... போட்டுக்கிட்டோம். சித்தப்பா நிறைய பட்டாசுகள் வாங்கி வந்திருந்தார். ஆனால் அவைகளில் வெடிகள் இல்லை. எல்லாம் மத்தாப்பு, தசைச்சக்கரம், புஸ்வாணம் போன்றவைகள்தான் இருந்தன. ஆனால் நிறைய இருந்தன. 

சாந்தி அக்கா எங்கள் வீட்டில் வேலை செய்கிறார். சாந்தி அக்காவின் மகள் பிரியா வாசலில் வந்து நின்று அம்மாவிடம் தகவல் சொன்னாள்.  ""அம்மாவுக்கு உடம்பு சரியில்லே..... ஜூரம்..... என்னை பாத்திரம் தேய்த்து தர அனுப்பியிருக்காங்க...'' 

""....அடப் பாவமே!.... பண்டிகையும் அதுவுமா இப்படி ஆயிடுச்சே!.... மருந்து ஏதாவது கொடுத்தியா?'' 

""வீட்டிலே ஜுர மாத்திரை இருந்தது.... கொடுத்திருக்கேன்.... அப்பா வெளியூரிலே வேலைக்குப் போயிருக்காங்க.... உங்க வீட்டு வேலை முடிச்சப்புறம்தான் டாக்டர்கிட்டே அழைச்சுக்கிட்டுப் போகணும்!'' 

இதைக் கவனித்த ஜானகி சித்தி, ""பரவாயில்லை பிரியாவைப் போகச் சொல்லுங்கம்மா!.... இன்னைக்கு நான் பாத்திரம் தேய்ச்சுத் தரேன்.... அதென்ன பிரமாதம்!'' அப்படீன்னாங்க.

""கொஞ்சம் இரு...'' என்று சொன்ன அம்மா, பிரியாவிடம் புதுத்துணிகளையும், கொஞ்சம் பட்சணங்களையும் தந்தாள். ராமு சித்தப்பாவும் அவளிடம் நிறைய பட்டாசுகளைக் கொடுத்தார்.

""கவலைப் படாதே!..... போயிட்டுவா....'' என்று சொல்லி பிரியா கையில் 200 ரூபாயையும் கொடுத்தார் சித்தப்பா. 

அம்மா என்னைப் பார்த்து, ""லக்ஷ்மி, ஒரு உதவி செய்.... இந்த பட்சணத்தை ஜானகி சித்தி ஃபிரெண்ட் பத்மா வீட்டிலே கொடுத்துடு!.....'' என்றாள் அம்மா. 

""ம்ஹூம்.... பட்டாசு வெடிக்க முடியாது!.... நான் வரதுக்குள்ளே ரகு எல்லாத்தையும் வெடிச்சுடுவான். எனக்கு ஒண்ணுமே இருக்காது!''

""அதெல்லாம் நான் உனக்கு தனியா எடுத்து வெக்கறேன்... கவலைப்படாதே ப்ளீஸ்.... பாவம் பத்மாவுக்கு இந்த வருஷம் பண்டிகை இல்லை.... குழந்தைகள் சாப்பிடும்!... பிரியாவோட போயிட்டு வந்துடு''

பத்மா வீட்டுக்கு எங்க சாந்தி அக்கா வீட்டைத் தாண்டித்தான் போகணும். பட்சணத்தை எடுத்துக்கொண்டு சாந்தியோட நடந்தேன்.

வழியில் பிரியாவின் வீட்டுக்கு அருகில் இருக்கும் ரேவதியைப் பார்த்தோம். அவள் நவராத்திரிக்கு பிரியாவோடு எங்க வீட்டுக்கு வந்திருக்கா. ரேவதியின் அப்பா இப்போது வேலை இல்லாம் இருக்கிறாராம்! அவனுக்குப் புதுத்துணிகூட எடுக்க முடியலையாம். சோகமா இருந்தா.

பிரியா அவ கிட்டே, ""இந்தா கொஞ்சம் பட்டாசும், பட்சணமும் தரேன்.... வாங்கிக்கோ!'' ன்னு அத்தனை பட்டாசுகளையும், கொஞ்சம் பட்சணங்களையும்  ரேவதியிடம் தந்துட்டா! ஆச்சரியமா இருந்தது.

""ரொம்ப தேங்க்ஸ் பிரியா"" என்று மகிழ்ச்சியாகச் சொன்னாள் ரேவதி. 
ரகு என் பட்டாசை வெடிச்சுடுவானோன்னு பயந்த நான் எங்கே?.... தனக்குக் கொடுத்த அத்தனை பட்டாசையும் கொடுத்துவிட்ட பிரியா எங்கே?'' 

 நான் பிரியாவை கட்டி அணைத்துக் கொண்டேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.