

நல்ல பழக்கங்களையும், நாகரிகமான நடத்தையையும் கொண்டுள்ள பண்புள்ள மக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்!
ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி நிறுவனங்களால்தான் உருவாக்கப்படுகிறது.
உண்ணும் உணவுக்கு ஏற்பவே மனிதனின் இயல்பும் அமைகிறது. எனவே, மனித சமுதாயத்தின் பண்பை உருவாக்குவதில் உணவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
முதலில் "சேவை!' ..., பின்பு "தன்னலம்' என்ற மனப்பான்மை அனைவரிடமும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நல்ல சமூகம் உண்டாகும்.
தர்மம் என்றால் என்ன?.... சமூகத்தை ஒன்றுபடுத்த வைக்கும் சக்திதான்!
வாழ்க்கையில் வெற்றி பெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு. வாழ்க்கையை வளமடையச் செய்வதே கல்வியின் நோக்கம்.
நம்முடைய பழக்க வழக்கங்கள் ஒழுங்காக இருந்தால் நமக்குப் பேராசை வராது. போதும் என்ற மனமே மிகவும் சிறந்த வரமாகும்.
நாம் மிகவும் முயன்று முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நாம் அடைய வேண்டிய இலட்சியம் இன்னமும் தூரத்திலேயே இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.