கடி

""தூக்கத்திலே நடக்கிற வியாதின்னு கேள்விப்பட்டிருக்கேன்!..... அதென்ன தூக்கத்திலே நடிக்கிற வியாதி?''
கடி
Updated on
1 min read

""தூக்கத்திலே நடக்கிற வியாதின்னு கேள்விப்பட்டிருக்கேன்!..... அதென்ன தூக்கத்திலே நடிக்கிற வியாதி?''
""அதுவா?....தூக்கத்திலே சினிமா வசனம் பேசறது!''

நெ.இராமன், சென்னை.

""இந்த வசன கர்த்தா வசனம் எழுதினா ரொம்ப சோகமா இருக்கும்!''
""விசன கர்த்தான்னு சொல்லு!''

எம்.ஏ.நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.



""ஸ்டூடண்ட்ஸ் அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தை எது தெரியுமா?''
""தெரியாது சார்!''
""கரெக்ட்!''

அமுதா அசோக்ராஜா,
திருச்சிராப்பள்ளி -- 620015


"" படிடா.... படிடா!''
""தெரியும்மா!..... அதான் கவனமா நடந்து வரேன்!''

சு.பிரேம் ராகுல், 
நாகர்கோயில் -- 629003.

""கிரிக்கெட் மைதானத்திலே கொசுவெல்லாம் செத்துப் போயிடுச்சு!.... ஏன் தெரியுமா?ட''
""ஏன்?''
""பிளேயர்ஸ் எல்லாம் ஆல் அவுட் ஆயிட்டாங்க!''

உ.அப்துல் ஹாதி,
கடையநல்லூர் -- 627751.

""அப்பா!.... நான் மேலே படிக்கப்போறேன்!''
""..."மே' லே ஸ்கூலெல்லாம் லீவு விட்டுடுவாங்களே!..... எப்படிப் படிப்பே?''

குமாரி . கே . விஜயலட்சுமி, 
திருப்பத்தூர் -- 635001
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com