கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழை தரும் குடைகள்!

தழைகள் அடர்ந்திருக்கும் குடைகள் - மலைதரையில் அசைந்திருக்கும் குடைகள்!

News image
Updated On :10 ஜூலை 2021, 12:30 am

தினமணி

தழைகள் அடர்ந்திருக்கும் குடைகள் - மலை
தரையில் அசைந்திருக்கும் குடைகள்!

நிழலை உவந்தளிக்கும் குடைகள் - தலை 
நிமிர்ந்து உயர்ந்திருக்கும் குடைகள்!

கிளைகள் அமைந்திருக்கும் குடைகள் - பசுங்
கிளிகள் அமர்ந்திருக்கும் குடைகள்!

குளுமை நிறைந்திருக்கும் குடைகள்! - இசைக் 
குயில்கள் இணைந்திருக்கும் குடைகள்!

மலர்கள் மலர்ந்திருக்கும் குடைகள் - பிணி 
மறையும் மருந்தளிக்கும் குடைகள்! 

பழங்கள் கனிந்திருக்கும் குடைகள் - உயிர் 
பலவின் பசி தணிக்கும் குடைகள்!

குழந்தை நடக்க வண்டியுடனே - ஆடும் 
குதிரைக் கொடையளிக்கும் குடைகள்! 

தளர்ந்த முதியோர் கைத் தடிகள் - உடன் 
இருக்கை, படுக்கை தரும் குடைகள்!

அலையில் படகளிக்கும் குடைகள் - கரை 
அடையத் துடுப்பளிக்கும்  குடைகள்! 

கலமாய்க் கடல் மிதக்கும் குடைகள் - பல 
கண்டம் தனைக் கடக்கும் குடைகள்!

இலைகள் பழுத்துதிர்க்கும் குடைகள் - அதை 
எரிப்பின் குளிர் துரத்தும் குடைகள்! 

உலைக்கு விறகளிக்கும் குடைகள் - சுவை 
உணவைச் சமைத்தளிக்கும் குடைகள்!

கழனி உழவுழைக்கும் குடைகள் - ஏர்க் 
கலப்பை உருவளிக்கும் குடைகள்! 

மழையை வரவழைக்கும் குடைகள் - பசும் 
"மரங்கள்' எனும் இயற்கைக் குடைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.