காற்றைத் தரும் கரங்கள் !
கூரை கீழே தொங்கி நாளும் சுழலும் விசிறியே!கோடை காலக் கொடையாம் உனக்கும் கவிதை பாடுவேன்!


கூரை கீழே தொங்கி நாளும்
சுழலும் விசிறியே!
கோடை காலக் கொடையாம் உனக்கும்
கவிதை பாடுவேன்!
மூன்று கரத்தால் மேலே இருந்து
காற்றைத் தருகிறாய்!
தோன்றும் வியர்வை தூரத் தள்ளி
சோர்வை விரட்டுறாய்!
பின்னே குவியும் காற்றை அள்ளி
முன்னே இறைக்கிறாய்!
முன்னே இருப்போர் மேனி குளிர
மகிழ்ந்து சுழல்கிறாய்!
கோடைக் காலக் கொடிய வெப்பம்
குறையச் செய்கிறாய்!
ஆடை அசைத்து முடியைக் கலைத்து
ஆட்டம் காட்டுறாய்!
தரைக்கு மேலே "தட்டா மாலை'
நாங்கள் சுழல்கிறோம்!
தலைக்கு மேலே நீயும் சுழன்று
நடனம் புரிகிறாய்!
உன்னில் மறைந்து ஓட வைக்கும்
மின்சக் தியுமே!
என்னுள் மறைந்து ஆட வைக்கும்
உன்னத சக்தியே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...