கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

DIN

"அப்பா... நம்ம வீட்டுக் கட்டட வேலைக்கு 'மேஸ் டூ' வந்திருக்காங்க...''
"என்னது.. மேஸ்டூ வா...?''
"ஆமாம்பா... நேத்து மூனு பேரு வந்தபோது அவங்கள 'மேஸ்திரி' வந்திருக்காங்கன்னு சொன்னீங்களே... இப்போ ரெண்டு பேர்தான் வந்திருக்காங்க...''

--------------


"தேவி... ஏன் இவ்வளவு லேட்டா ஸ்கூலுக்கு வர்ற...?''
"தினமும் லேட்டா வர்ற நீங்க இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டீங்க டீச்சர்...''

--------------


"பரிட்சைப் பேப்பருல ஏன் இப்படிக் கண்டதையும் எழுதி வெச்சிருக்க..?''
"நீங்கதானே சார் ... தெரிஞ்சதை மட்டும் எழுதச் சொன்னீங்க...''

--------------


"என்னது... செருப்பு காலைக் கடிச்சதுக்கு பல் டாக்டர்கிட்ட போனியா... எதுக்கு?''
"கடிக்கிற செருப்போட பல்லைப் புடுங்கத்தான்...''

--------------

"உண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா எதுவும் சொல்லாம நிக்கிறியே...'' 
"எங்கப்பா என்னைப் பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு மிஸ்...''

--------------

"வாயைத் திறந்து ஆ காட்டுங்க...''
"என்ன டாக்டர் கிண்டல் பண்றீங்க... வாய்க்குள்ள பல்லுதானே இருக்கும்.... 'ஆ' எப்படி இருக்கும்...?''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.