நூலகம் செல்வது நற்பழக்கம் - அது
நாளும் வரணும் நம்பழக்கம்!
நூலகம் என்பது போதிமரம் - அதன்
நிழலில் ஒதுங்கு; ஞானம்வரும்!
நூலகம் அது ஒரு "நூல்'ஏணி - உன்
நோக்கம் உயர்த்தும் புகழ் ஏணி!
படங்கள் போட்ட கதைநூல்கள் - நல்ல
பாட்டும் சொல்லும் கவிநூல்கள்!
திடமாய் வளரும் பொதுஅறிவு- அங்கு
தினமும் நூல்கள் புதுவரவு!
அறவுரை கூறும் சிறுநூல்கள் - நுட்ப
அறிவியல் பேசும் சிலநூல்கள்!
வரலா றுகளும் வாழ்வியலும் - உன்னை
வடிவமைக் கின்ற தாய்மடிகள்!
தன்னம் பிக்கை தரும்நூல்கள் - உன்
தகுதியை வளர்க்கும் பெருநூல்கள்
இன்னும் எத்தனை உண்டிங்கு - நீ
ஏற்றம் பெறுவாய் சென்றங்கு!
நூலகம் செல்வது நற்பழக்கம் - அது
நாளும் வரணும் நம்பழக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எதிரொலி: சீனாவில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்வு!

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
ஈரானை விட்டுவைத்தால் இஸ்ரேல் அழிக்கப்பட்டிருக்கும்: முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல்! - டிரம்ப்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 இடங்கள்!
வீடியோக்கள்

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

