கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நா. இராதாகிருட்டிணன்

குடும்பத்தோடு அனைவரும்
குற்றாலம்தான் போகலாம்
கொட்டும் அருவி நீரிலே
குதித்து ஆட்டம் போடலாம்!

கோடைக் கேற்ற குளிர்ச்சிதான்
குளிக்கக் குளிக்க மகிழ்ச்சிதான்!
கோடி கோடி இன்பம்தான்
ஓடிப் போகும் துன்பம்தான்!

நோய்கள்  தீர்க்கும் மூலிகை
நாவி லினிக்கும் பழவகை
பாய்ந்து தாவும் குரங்குகள்
பல்லைக் காட்டிச் சிரிக்குமே!

குறத்தி சொல்லும் குறிகள்தான்
குற்றாலத்தின் சிறப்புதான்!
மறக்க முடியா காட்சிதான்
மண்ணில் இயற்கை ஆட்சிதான்!

மலையில் மேகம் தவழ்ந்திடும்
மழையில் உடலும் குளிர்ந்திடும்!
அலை அலையாய் கூட்டம்தான்
அருவி நோக்கி நகர்ந்திடும்!

அருளும் இறைவன் கோயிலில்
அருவி செய்யும் பூசைதான்
பெருமை மிக்கக் குற்றாலத்தைப்
பார்க்கப் பார்க்க ஆசைதான்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.