மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பொன்மொழிகள்...

உதவி செய்யுங்கள்! அதைவிட,  உயர்ந்தவர்களுக்கு செய்வதைவிட ஒருவரை உயர்த்துவதற்குச் செய்யுங்கள்.

News image
Updated On :28 அக்டோபர் 2023, 2:37 pm

உதவி செய்யுங்கள்! அதைவிட,  உயர்ந்தவர்களுக்கு செய்வதைவிட ஒருவரை உயர்த்துவதற்குச் செய்யுங்கள்.

வாழ்க்கையில் தேடிக் கொண்டே இருக்காதீர்கள். கிடைத்ததை அனுபவிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.

முனைவர் உமாதேவி பலராமன்

சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள். ஆனால் செயல்கள்தான் தங்கத் துளிகள்.
பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல; அது உயர்ந்த பண்பின் அறிகுறி.
நதி போல் ஓடிக் கொண்டிரு! வெற்றி ஓரிடத்தில் காத்திருக்கும் கடலாக!
அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரம்தான்!

-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

பிறரை மகிழ்விப்பதன் மூலம் தானும் மகிழ்கிறான்; பிறரை குறை கூறுவதால் தானும் குறைந்து போகிறான்.
மகிழ்ச்சி என்பது மனம் அமைதியாக இருப்பதுதான்!
நீ உன் பலவீனத்தை வெளியே சொன்னாலோ, இல்லை செயலில் காட்டினாலோ சமுதாயம் உன்னை கீழே தூக்கிப் போட்டு மிதித்துவிடும்.

ஆர்.கே.லிங்கேசன், 
மேலகிருஷ்ணன்புதூர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.