/
பிள்ளைக் குலமே! பிள்ளைக் குலமே!
பெற்ற தாயின் பெருமை அறிவீர்!
உள்ளம் அள்ளும் உயர்ந்த மொழியாம்!
அமுதத் தமிழும் அன்னை உணர்வீர்!
தாயை மறத்தல் தீதென் றறிவீர்!
தமிழை விடலும் தீதே உணர்வீர்!
சேயாய்த் தொட்டில் தாலாட்டு கேட்டீர்!
செந்த மிழ்த்தாய் சந்தம் இரசித்தீர்!
நமது தமிழில் நாலு முண்டு
நாடி வாழ நல்ல னவுண்டு!
சுமைகள் மறக்கச் செம்பா வுண்டு!
சுகமாய் வாழச் செந்நெ றியுண்டு!
வெல்லம் என்றால் நா இனியாது!
வாடை என்றால் உடல் குளிராது!
நல்ல சுவைகள் நிறைந்த தமிழை
நாளும் கற்கின் நாவிற் கினிதே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







