தெரியுமா?

மெக்சிகோவில் மாற்றுத்திறனாளிகளுக்காக மஞ்சள் நிற பஸ்கள் ஓடுகின்றன.இவைகளில் குறைந்த செலவில் நல்ல வசதிகளுடன் பயணம் செய்யலாம்.
தெரியுமா?
Published on
Updated on
1 min read

மெக்சிகோவில் மாற்றுத்திறனாளிகளுக்காக மஞ்சள் நிற பஸ்கள் ஓடுகின்றன. இவைகளில் குறைந்த செலவில் நல்ல வசதிகளுடன் பயணம் செய்யலாம்.

'உ.இராமநாதன், நாகர்கோவில்.

ஸ்நூக்கர் விளையாட்டில் 22 பந்துகளைப் பயன்படுத்துவர்.

செங்காந்தள், சென்னை'125.

ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமானநதியான 'டான்யூப்', பத்து நாடுகளைக் கடந்துச் சென்று, கருங்கடலில் கலக்கிறது. இது ஒரு சாதனைதான். ஏனெனில் மற்ற எந்த நதியும் இத்தனை நாடுகளைக் கடப்பதில்லை.

ஜெர்மனி, ஆஸ்திரியா, சுலோவாக்கியா, ஹங்கேரி, குரேசியா, செர்பியா, பல்கேரியா, ருமேனியா, மால்டோவா, உக்ரைன் ஆகியவைதான் அந்த 10 நாடுகள்.

விமலா சடையப்பன், காளனம்பட்டி.

திருவள்ளுவர் ஆண்டைக் கண்டுபிடிக்கஆங்கில ஆண்டுடன் 31'ஐ கூட்டினால் போதும்.

'முக்கிமலை நஞ்சன்

நார்வே, கிரீஸ் போன்ற நாடுகளில் எழுத்து மொழியை 'தாய்மொழி'என்றும் பேச்சுமொழியை 'மாமியார் மொழி' என்றும் அழைக்கின்றனர்.

முதன்முதலில் நாடக இலக்கணத்தை எழுதியவர் பரிமாற்கலைஞர்.செம்மொழி என்ற சொல்லையும் இவர்தான் உருவாக்கினார்.அ.மாதவையாவின் 'பத்மாவதி சரித்திரம்' நாவலுக்கு முதலில் இவர்தான் விமர்சனத்தையும் எழுதினார்.

'நெ.இராமகிருஷ்ணன், சென்னை'74.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் லூர்து அன்னையின் கத்தோலிக்க திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானிஷ், டச்சு, ஜெர்மன் ஆகிய ஆறு ஐரோப்பிய மொழிகளின் மத்தியில் செந்தமிழான தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது.ஆசிய மொழிகளில் தமிழை ஐரோப்பிய பிஷப் கவுன்சில்அங்கீகரித்துள்ளது.

'ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com