லடாக்கின் தொலைதூர நிலப்பரப்புகளில் மறைந்திருக்கும் சுமதாங் வெந்நீர் நீரூற்று, நாட்டின் மிக இனிமையான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும்.
லேவிலிருந்து 138 கி.மீ. தூரத்தில், சிந்து நதியின் அருகே சுமதாங் எனும் குக்கிராமத்தில் சூடான கந்தக வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது. மணாலி புறவழிச்சாலைக்கு முன்பு த்சோமோரியிலிருந்து லே செல்லும் பிரதான சாலையில் இந்த நீரூற்று உள்ளது.
வெறிச்சோடிய சூழல், பிரம்மாண்ட மலைகள், அமைதியான நீர்நிலைகளைக் கொண்டிருத்தல், புகைப்படம் எடுத்தல், ஓய்வெடுத்தல் போன்றவற்றுக்கு இது சிறந்த இடமாகும்.
த்சோமோரி ஏரிக்குச் செல்பவர்கள் நடுவழியில் உள்ள இந்த சுமதாங் வெந்நீரூற்றில் நீராடிச் செல்கின்றனர். சில குளியல் அறைகளும், உணவகங்களும் இங்குள்ளன.
இந்த நீரில் குளிப்பதால் தசை வலி நீங்கி, ரத்த ஓட்டம் மேம்படுகிறது. மூட்டுவலி, தோல் நோய்கள், சுவாச பிரச்னைகள் உள்ளவர்கள் பயணிக்க குளிர்காலம்தான் சிறந்தது. குளிர்ந்த காற்றும், பனி மூட்டமும் சூடான நீரில் மூழ்குவதும் தனித்துவமான அனுபவத்தை உருவாக்குகிறது. அங்குள்ள நீராவிக் குளங்களிலும் இறங்கிக் குளிக்கலாம். பயணத்துக்கு நவம்பர்-பிப்ரவரி மாதம் சிறந்த நேரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.