world-food-day
உலகம் எங்கள் கையில்
உண்மை எங்கள் நெஞ்சில்
ஒருகணமும் சோர மாட்டோம்
ஒன்று பட்டே நிற்போம்
-----------------
உறவுகள் எல்லாம் கூடி
உயரும் வழியைத் தேடி
புதிய வேகம் செய்வோம்
புதுமை பலவும் செய்வோம்
-----------------
உழைப்பே எங்கள் சொத்து
ஊக்கமே எங்கள் வித்து
சோதனை வந்தால் துவளோம்
சாதனை செய்தே தீர்வோம்
-----------------
உள்ளம் முழுக்க அறமே
உண்மை ஒளிரும் தினமே
செம்மை வாழ்வு வாழ்வோம்
செருக்கு இல்லை வீழோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.