நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கன்னங்களை வருடும் பூக்கள்!

திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா மட்டுமன்றி இப்போது நடத்தப்படும் பல்வேறு விழாக்களிலும்,ஃபோட்டோ, வீடியோ இன்றியமையாதது ஆகிவிட்டன. இத்தொழில் வளர்ச்சி எந்த அளவிற்கு உயருகிறதோ,அதே அளவ

News image
Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா மட்டுமன்றி இப்போது நடத்தப்படும் பல்வேறு விழாக்களிலும்,ஃபோட்டோ, வீடியோ இன்றியமையாதது ஆகிவிட்டன. இத்தொழில் வளர்ச்சி எந்த அளவிற்கு உயருகிறதோ,அதே அளவில், தொழிலில் போட்டியும் அதிகரித்து வருகிறது. தொழிலில் புதுப்புது தொழில்நுட்பங்களைக் கையாளும் நபரால் மட்டுமே தொடர்ந்து வெற்றி காண முடிகிறது.

 அந்த வகையில், திரைப்படங்களில் மட்டுமே கண்டு களித்த முப்பரிமாணம் (3டி-3 ஈஐஙஉசநஐஞச) தொழில்நுட்பத்தை, விடியோவிலும் பயன்படுத்தி புதியதோர் அத்யாயத்தை உருவாக்கியுள்ளார் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த தீபன் சாமுவேல்.

 உங்களுக்கு எப்படி முப்பரிமாணம் தொழில் நுட்பத்தில் விடியோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது?

 நான் ஆ.ஸ்ரீர்ம். பட்டதாரி. எனக்கு சிறுவயது முதலே ஃபோட்டோ, வீடியோ எடுப்பதில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் என்னுடைய இளம் வயதில் ஃபோட்டோ விடியோ எடுக்கும் தொழிலைக் கற்றுக்கொண்டேன். இத்தொழிலில் ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். அதனால் முதலில் உள்ளூர் நண்பர்கள் உதவியோடு 3 குறும்படங்களை எடுத்து, விடியோ எடிட்டிங் உள்பட அனைத்தும் நானே செய்து,உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பினேன். அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 சிறிய வயதில் மைடியர் குட்டிச்சாத்தான், மேஜிக்மேஜிக் போன்ற முப்பரிமாணம் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படங்களைத் தியேட்டரில் கண்ணாடி போட்டு பார்த்த நினைவுகள் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை. நாம் ஏன் முப்பரிமாணம் தொழில்நுட்பத்தில் விடியோ எடுக்கக் கூடாது என நினைத்தேன். எடுத்துப் பார்ப்போம் என முயன்றேன். தற்போது அதில் வெற்றிகண்டுள்ளேன்.

 முப்பரிமாணத்திற்கென புதிய கேமராக்கள் ஏதும் பயன்படுத்துகிறீர்களா?

 இந்தத் தொழில் நுட்பத்தில் விடியோ எடுக்கவேண்டுமானால், 3 கேமராக்களைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்ய வேண்டும். ஒரு கேமரா சாதாரண முறையில் ஒளிப்பதிவு செய்யவும், மற்ற இரண்டும் முப்பரிமாண முறையில் ஒளிப்பதிவு செய்யவும் பயன்படும். அதன்பின் விடியோ எடிட்டிங் செய்து, சாதாரண முறையில் பார்க்க ஒரு டி.வி.டி.யும், முப்பரிமாண முறையில் பார்க்க ஒரு டி.வி.டி. யும் வழங்குகிறோம்.

 இந்த முப்பரிமாண முறையில் எடுத்த விடியோக்களைச் சாதாரணமாகப் பார்த்தால் தெளிவாகத் தெரியாது. கண்டிப்பாக முப்பரிமாண கண்ணாடியைப் பயன்படுத்தியே பார்க்க முடியும். தற்போது அத்தகைய முப்பரிமாண கண்ணாடிகளை, மதுரை அருகே உள்ள வத்தலக்குண்டு பகுதியில், நான் மொத்தமாக வாங்கி, வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விடுகிறேன்.

 இதனை சாதாரண டி.வி.யிலேயே பார்க்கலாம். ஆனால் எல்.சி.டி. டி.வி. மற்றும் கணினி திரையில் பார்த்தால் மிகச் சிறப்பாகத் தெரியும். திரையில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் திரையை விட்டு வெளியே நம் கண்ணருகே வந்து செல்வது போன்று காட்சியளிக்கும். சாக்லேட் வழங்குதல் நம் வாய் அருகே வந்து தருவது போன்றும், பூக்கள் நம் கன்னம் அருகே வருடுதல் போன்றும் பல்வேறு வித்தியாசமான காட்சிகளை நாம் காண முடியும்.

 இந்த முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீங்கள்தான் முதல் முறையாக விடியோ எடுத்துள்ளீர்களா?

 பெங்களூர், திருவனந்தபுரம், மும்பை போன்ற பகுதிகளில் இந்த முப்பரிமாண முறையில் விடியோ எடுக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் தமிழகத்தில் முப்பரிமாண முறையில் விடியோ எடுக்கப்பட்டுள்ளதாக நான் கேள்விப்படவில்லை. தற்போது ஓர் ஆர்டருக்கு முப்பரிமாணம் தொழில்நுட்பத்தில் செய்து கொடுக்க 25 ஆயிரம் ரூபாய் வாங்குகிறேன்.ஆனால் வெளியூர் சென்று எடுத்துக் கொடுக்க வேண்டுமானால், அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்பதான் தொகையைப் பெற வேண்டியது வரும்.

 இனி வரும் காலம் 3டி உலகம். எனவே விடியோ தொழில் செய்து வரும் இளைஞர்கள், வருங்கால 3டி உலகத்திற்கு ஏற்ப, தங்கள் தொழிலில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொழிலை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.