தேர்வில் ஜெயித்தால் உதவி!
நல்ல கல்லூரியில் படித்து,உயர்ந்த வேலைக்குச் சென்று கைநிறைய ஊதியம் வாங்கி, திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் அதிகபட்ச ஆசை.


நல்ல கல்லூரியில் படித்து,உயர்ந்த வேலைக்குச் சென்று கைநிறைய ஊதியம் வாங்கி, திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் அதிகபட்ச ஆசை.
அதுவும் திருமணம் ஆகிவிட்டால், தனது பெற்றோர்களைக் கூட புறந்தள்ளிவிட்டு, தனது பிள்ளை,தனது மனைவி,தனது குடும்பம் என தனது எண்ணத்தை சுருக்கி, அபார்ட்மென்ட் கலாசாரம் என்ற குறுகிய வட்டத்துக்குள் நுழைந்து,வெளியுலகப் பிரச்னைகளை மறந்து தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாக மாறி வரும் நிலை, நகரம், கிராமம் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து பகுதிகளிலும்
பரவியுள்ளது.
இப்படி உறவுகளை மறந்து போன மக்களுக்கு மத்தியில் கிராமத்து இளைஞர் ஒருவர் ஏழை மாணவர்,மாணவிகளின் கல்விக்காகவும்,அவர்களின் வாழ்க்கை உயர்வுக்காகவும் சப்தமின்றி பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம்,கடையநல்லூர் அருகேயுள்ள நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையா,கோமதி தம்பதி மகனான நாராயணன் என்பவர்தான் கடந்த பல ஆண்டுகளாக இந்த உதவிகளைச் செய்து வருகிறார். படிக்க வசதியில்லாத பல மாணவர்,மாணவிகள் இவரின் உதவியால் உயர்கல்வி வாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும் ஆதரவற்ற பெண்களுக்கும் இவர் தொழில் பயிற்சி படிக்க உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாராயணனை சந்தித்து பேசியபோது கூறியதாவது:
""எனது குடும்பம் விவசாயக் குடும்பம். எனது தந்தை மிகவும் சிரமப்பட்டுத்தான் என்னைப் படிக்க வைத்தார். பல சமயங்களில் தாமதமாகத்தான் கல்லூரிக்கு பணம் கட்டும் நிலையும் ஏற்படும். இந் நிலைதான் என்னை பாதித்தது. இதையும் தாண்டி என்னுடன் கல்லூரியில் படித்த நண்பனுக்கு,பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதையறிந்த நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து பலரிடம் பணம் வசூலித்து அவரது படிப்புக்காக கல்லூரியில் பணம் செலுத்தினோம். பலரும் உதவியதால் நண்பன் தனது படிப்பை முடித்தான்.
இந்த சூழ்நிலைதான், என்னுள் கல்வி கற்க விரும்பும் மாணவர்,மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நான் படித்து முடித்து ஆடிட்டராகப் பணியாற்றத் தொடங்கியது முதல் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறப்பாகப் படிக்கும் மாணவர்,மாணவிகளின் கல்விக்கு உதவுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன்.
இதில் நான் பின்பற்றும் விஷயம் என்னவென்றால் படிக்க விரும்பும் மாணவர், மாணவிகளுக்குரிய பணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நானே நேரடியாக கொண்டு செலுத்துவதுதான்.
இதனால் சரியாகப் படிக்கும் மாணவர்களுக்கு முறையாக உதவி சென்று சேர்கிறது. மேலும் கல்லூரிகளில் எந்தவித அரியர்ஸýம் இல்லாமல் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த ஆண்டிற்கு உதவுவேன் என தெரிவித்தபிறகே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்'' என்கிறார்
நாராயணன்.
இதுதவிர கடையநல்லூர் வட்டாரத்தைச் சேர்ந்த சிவசைலநாதா நடுநிலைப் பள்ளி, ஹிதாயத்துல்லா இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி,மேலப்பாளையம் இந்து நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை வழங்கியுள்ளார்.
பண்பொழி ஆர்.கே.வி.நடுநிலைப் பள்ளி, நெடுவயல் திருமரியலூயிஸ் நடுநிலைப் பள்ளி,நயினாரகரம் இந்து நடுநிலைப் பள்ளி, சிவராமபேட்டை இந்து நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இலவசமாக கண் பரிசோதனை நடத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கண் கண்ணாடியையும் அவர் வழங்கியுள்ளார்.
இது தவிர தேவைப்படும் பள்ளிகள் தொடர்பு கொள்ளும் நிலையில்,மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகளையும்,கல்வி உபகரணங்களையும் அவர் வழங்குகிறார். ஏழை பெண்களின் திருமணத்திற்கு பாத்திரங்கள், பொருள்களை அவ்வப்போது வழங்கியும் வருகிறார்.
இப்படி பல ஆண்டுகளாக ஓசையின்றி சேவை செய்து வரும் இவருக்கு அரிமா சங்கம் சிறந்த சமூக ஆர்வலர் என்ற விருதை வழங்கி கெüரவித்துள்ளது. சேவைப்பணிகளுக்கு தனது மனைவி சுதாவும் உறுதுணையாக இருப்பதாகவும் நாராயணன் தெரிவிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...