3 கோடி ரூபாய் கொடுத்து... வாட்ச் வாங்குறாங்கப்பா!
பணம் இல்லையே என்று புலம்புகிறவர்கள் கோடிக்கணக்கானோர். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று தெரியாமல், கன்னாபின்னாவென்று செலவழிப்பவர்கள் சிலர்.


பணம் இல்லையே என்று புலம்புகிறவர்கள் கோடிக்கணக்கானோர். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று தெரியாமல், கன்னாபின்னாவென்று செலவழிப்பவர்கள் சிலர். ஒரு கைக்கடிகாரம் வாங்குவதற்காக எவ்வளவு ரூபாயைச் செலவு செய்திருக்கிறார்கள் பாருங்கள், இந்த பிரபலங்கள்! கையும் கடிகாரமுமாக மாட்டிக் கொண்ட அவர்களுடைய கடிகாரத்தின் அமெரிக்க டாலர் மதிப்பிலான விலைகளை நம்மூர் ரூபாயில் மாற்றிப் போட்டிருக்கிறோம்.
வியப்படைவதும், வயிறெரிவதும் உங்கள் மனநிலையைப் பொருத்தது!
1.பிரான்சின் முன்னாள் குடியரசுத் தலைவர் நிக்கலோஸ் சர்கோஸி அணிந்திருந்த கடிகாரத்தின் விலை 1 கோடியே 94 லட்சத்து 12 ஆயிரத்து 766 ரூபாய்.
2.இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியா பெர்லஸ்கோனி வாங்கிய கடிகாரத்தின் விலை 3 கோடியே 68 லட்சத்து 1000 ரூபாய்.
3.முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி அணிந்திருந்த ஒமேகா டேங்க் ட்விஸ்ட் கடிகாரத்தின் அப்போதைய விலை 2 கோடியே 36 லட்சத்து, 69 ஆயிரத்து 660 ரூபாய்.
4.இளவரசர் வில்லியம்ஸ் வாங்கிய கடிகாரத்தின் விலை 2 லட்சத்து 2 ஆயிரத்து 921 ரூபாய்.
5.முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி கட்டியிருந்த எச்எம்டி ஜனதா வாட்சின் விலை வெறும் 1050 ரூபாய்.
6.நமது அண்டைநாடான பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்டியிருக்கும் கடிகாரத்தின் விலை ரொம்ப ரொம்ப குறைவுதான். 20 லட்சத்து 63 ஆயிரத்து 23 ரூபாய்.
7.ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்விடேவ் கட்டியிருக்கிற கடிகாரத்தின் விலை சுமார் 10 லட்சத்து 14 ஆயிரத்து 568 ரூபாய்தான். ரஷ்ய குடியரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின் கடிகாரத்தின் விலை ரூ. 6 லட்சத்து 76 ஆயிரத்து 354.
8.அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் அணிந்திருக்கும் ரோலக்ஸ் டூ டோன் கடிகாரத்தின் விலை 18 லட்சத்து 11 ஆயிரத்து 160 ரூபாய்.
9.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கடிகாரத்தின் விலை ரூ.23, 845.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...