புல்லி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கண்டதை படிக்காதே'. கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் ஜோதிமுருகன். படம் குறித்து பேசுகையில்.. ""பிரம்மாண்ட வெற்றி பெறும் திரைக்கதை அமைப்பை படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள். இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்படமாக இருக்கும்.
படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும். படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் சஸ்பென்ஸ் இருந்துக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர்.
ஆதித்யா, ரவி ஆர்யான், சபீதா ஆனந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி என நான்கு புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கொடைக்கானல், ஊட்டி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டடுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










