இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

எக்கோ

"தடம்', "களரி', "பசங்க 2' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து சரிவர அமையாததால், மெகா தொடர்களின் பக்கம் சாய்ந்தார்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 12:30 am

DIN

"தடம்', "களரி', "பசங்க 2' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து சரிவர அமையாததால், மெகா தொடர்களின் பக்கம் சாய்ந்தார். இப்போது சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகும் "எக்கோ' படத்தில் நடிக்கிறார்.  இதில் திஷா பாண்டே இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் காட்சிகள் கடந்த இரு வார காலமாக படமாக்கப்பட்டு வருகின்றன.  காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை  டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். "கில்லி', "தூள்', உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.