விளக்கம் தரும் இலியானா
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, தற்போது ஹிந்திப் படங்களில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறார்.


தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, தற்போது ஹிந்திப் படங்களில் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அபிஷேக் பச்சனுடன் இணைந்து "தி பிக் ஃபுல்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனிடையே, சமூக வலைதளத்தில் எப்போதும் தீவிரமாக இருக்கும் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது...""என்னுடைய தோற்றம் குறித்து நான் கவலைப்பட்டுள்ளேன். நான் கச்சிதமாக இருக்கவேண்டியதில்லை என்பதை உணராமல் இருந்திருக்கிறேன். நான் என் குறைகளுடன் அழகாக இருக்க வேண்டியவள். வித்தியாசமான, தனித்துவமானப் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு தழும்பும், வீக்கங்களும், ஒவ்வொரு குறையும் என்னை உருவாக்கின.
எனக்கே எனக்கான அழகை உருவாக்கின. உலகம் அழகு என்று எதை முடிவு செய்து வைத்துள்ளதோ அதற்குள் என்னைப் பொருத்திக் கொள்வதை நிறுத்தினேன். அதற்குள் எப்படியாவது பொருந்திப் போக வேண்டும் என்று அரும்பாடுபடுவதை நிறுத்தினேன். நான் தனித்துவமாக இருக்கப் பிறந்திருக்கும்போது, ஏன் அப்படிப் பொருந்த வேண்டும்?'' இவ்வாறு இலியானா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...